×

தமிழரை காதலிக்கும் நிக்கி கல்ராணி

டார்லிங், மரகத நாணயம், ஹரஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் அருண்குமார் ஜோடியாக தமாக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நிக்கி கல்ராணியிடம், அவரது ரகசிய காதலனை பற்றி மீடியாவினர் கேள்வி கேட்டனர்.

அப்போது தான் ஒருவரை காதலிப்பதாகவும் அது பற்றி விளக்கமாக பேச இன்னும் நேரம் இருப்பதாகவும் தெரிவித்தார். திருமணத்தை பற்றி நிருபர்கள் கேட்டபோது, 3 வருடம் கழித்தே தனது திருமணம் நடக்கும். அதுவரை சினிமாவில் நடிப்பேன் என அவர் கூறினார். இது குறித்து விசாரித்த போது, சென்னையை சேர்ந்த ஒருவரை நிக்கி கல்ராணி காதலிப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் என்பதை கூற மறுத்துவிட்டார்.

Tags : Nikki Kalrani ,
× RELATED ‘மரகத நாணயம்’ 2ம் பாகம்: இயக்குனர் தகவல்