×

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாறு வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாறு வெள்ள சூழந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே  திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நள்ளிரவில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதை அடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இன்று காலை கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வரத்து சற்று குறைந்ததை அடுத்து சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது….

The post பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாறு வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Panchalinga Falls ,Amanalingeswarar temple ,Udumalai ,Panchalinga ,Udumalai, Tirupur district ,Panchalinga waterfall ,
× RELATED பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி..!!