துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துரைப்பாக்கம் கண்ணகி நகர் 22வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). இவர் இந்திய குடியரசு கட்சியில் தென்சென்னை மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது மனைவி குட்டி (40). இவர்களுக்கு கீழ் தளத்தில் 1 வீடும், முதல் மாடியில் 1 வீடும் உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு, கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மேல் வீட்டில் தூங்கினர்.நேற்று காலை கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பிரோவில் இருந்த 40 புடவைகள், லேப்டாப், டிரில்லிங் மெஷின், ப்ரொஜெக்டர், மின் வயர்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, செல்வம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
The post வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.
