×

தல-தளபதி யாரை பிடிக்கும் பெயர் குழப்பத்தால் நடிகைகள் திணறல்

ஹீரோயின்களிடம் அவ்வப்போது சில கேள்விகள் வைக்கப்படுகிறது. அது அவர்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிடுகிறது. உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்பதுதான் அந்த கேள்வி. ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக அஜீத் அல்லது விஜய் என்று சொல்வதுண்டு இன்னும் சில நடிகைகள் ஒருவர் பெயரை சொன்னால் இன்னொரு ஹீரோவின் ரசிகர்களுக்கு தன்னை பிடிக்காமல்போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவிவிடுவார்கள் அல்லது எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும் என்று பொதுவாக ஒரு பதில் சொல்லி எஸ்ஸாவார்கள்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ப்ரியா ஆனந்த் பங்கேற்றார். அவரிடம், ‘உங்களுக்கு அதிகம் பிடித்தவர் தல அஜித்தா? தளபதி விஜய்யா?’ என்று கேட்டபோது தல அஜித் என்று பதில் அளித்தார். அந்த வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் தல அஜித் என்று கூறிய நடிகை பிரியாமணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியாமணி, ‘அது நானில்லை’ என்று பதில் அளித்தார். அந்த பதிவுக்கு கீழ் நடிகை பிரியா ஆனந்த், ‘அது நான்தான்’ என ஒப்புக்கொண்டார்.

Tags : Actresses ,
× RELATED போதை பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஜாமீன் மனு தள்ளுபடி