மம்மூட்டி, ராஜ்கிரண் இணையும் குபேரன்

தமிழ் மற்றும் மலையாளத்தில் மம்மூட்டி, ராஜ்கிரண் நடித்துள்ள படம், குபேரன். ராஜ்கிரண் நடிக்கும் முதல் மலையாள படமான இதற்கு, ஷைலாக் என்று மலையாளத்தில் பெயரிடப்பட்டுள்ளது. அஜய் வாசுதேவ் இயக்கியுள்ளார். என்  ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே ஆகிய படங்களை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண், மீனா இணைந்து நடித்துள்ளனர்.

மற்றும் கலாபவன் சாஜன், ஜான் விஜய், அர்த்தனா பினு, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, சித்திக் நடித்துள்ளனர். பிபின் மோகன், அனீஸ் ஹமீது எழுதியுள்ள கதைக்கு ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் ஒளிப்பதிவு செய்ய, கோபிசுந்தர் இசை அமைத்துள்ளார்.

Related Stories:

>