×

குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் 3 காட்டு யானைகள் முகாம்: வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்..!

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சிப்காட் பகுதியில் இன்று காலை மூன்று காட்டு யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  கடந்த 10 நாட்களுக்கு மேலாக சோக்காடி மற்றும் பனகமுட்லு மற்றும் மேலுமலை வனப்பகுதியில் இருந்த மூன்று காட்டு யானைக முகாமிட்டுருந்தது. இந்த காட்டுயானைகளை கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட  சானமாவு வனபகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 10 நாட்களுக்கு மேலாக பிக்கனபள்ளி மற்றும் மேலுமலை வனப்பகுதியில் வந்து முகாமிட்டிருந்த நிலையில் இன்று காலை திடீரென குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்கு புகுந்த மூன்று காட்டு யானைகள் சிப்காட் வளாகத்திற்குள் முகாமிட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த யானைகளை கண்டு சிப்காட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தலை தெறிக்க  ஓடினர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் யானைகளை  பட்டாசுகள் மற்றும் பானங்கள் மூலம் துரத்தும் பணியில் தீவிரமாகிடப்பட்டு வருகின்றனர். மேலும் காட்டுயானைகள் சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் 3 காட்டு யானைகள் முகாம்: வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்..! appeared first on Dinakaran.

Tags : Guruparapalli Chipgat ,Krishnagiri ,Krishnagiri district ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...