×

இந்திய பெருங்கடலில் படமான ஜுவாலை

பாலு மகேந்திரா, ஏ.எம்.ஜோதி கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம், ஜுவாலை. படம் குறித்து அவர் கூறுகையில், ‘75 சதவிகித காட்சிகள் இந்திய பெருங்கடல் மற்றும் தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளது. காதல், காமம், கோபம், வெறுப்பு மாதிரி பழிவாங்குதலும் ஜுவாலை மாதிரிதான்.

நமது உடமைக்கும், உரிமைக்கும் பாதிப்பு ஏற்படும்போது, பழிவாங்கும் ஜுவாலை எரிய வேண்டியது அவசியமாகிறது. இதுதான் பட கான்செப்ட். ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப், ஆழ்கடல் காட்சிகளை  படமாக்கியுள்ளார். மனுஷா தயாரித்துள்ளார்’ என்றார்.

Tags : Indian Ocean Jewel ,
× RELATED கொரோனாவால் கிடைத்த பட வாய்ப்பு: மாளவிகா பூரிப்பு