×

சர்ச்சை படத்தில் சாய்பல்லவி

தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக லவ் ஸ்டோரி படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அத்துடன் ராணா நடிக்கும் விரத பர்வம் 1992 என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்கிறார். நாட்டுப்புற பாடகியாக வரும் சாய் பல்லவி, பின்னர் நக்சலைட்டாக மாறும் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார்.

இதே படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு காட்சிகள் இடம்பெறுகின்றன. கதையில் இந்த காட்சிகள் முக்கியத்துவமாக இடம்பெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சாய் பல்லவியின் வேடமும் சர்ச்சைக்குரியாத அமைக்கப்பட்டுள்ளதாம்.

Tags :
× RELATED தடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது...