- சென்னை
- ஜி.வி. பிரகாஷ்
- மு. மாறன்
- தேஜு அஸ்வினி
- ஸ்ரீகாந்த்
- பிந்து மாதவி
- வேட்டை முத்துக்குமார்
- ரெடின் கிங்ஸ்லி
- ரமேஷ் திலக்
- Haripriya
- டி. இம்மன்
- ஜெயக்கொடி அமல்ராஜ்
- ஜே.டி.எஸ் திரைப்பட தொழிற்சாலை
சென்னை: ‘பிளாக் மெயில்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 12ம் தேதி படம் வெளியாகிறது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இணைந்து வெளியிடுகிறார்கள்.
