×

ரஜினிக்காக திரளும் நட்சத்திரங்கள்

ரஜினிக்காக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி பட நட்சத்திரங்கள் திரள்கின்றனர். தர்பார் படத்துக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நாளை (7ம் தேதி) மாலை 6 மணிக்கு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபல நட்சத்திரங்கள் வெளியிட இருக்கின்றனர். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

Tags : Rajeev ,rally ,
× RELATED மதுரை அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம்...