×

இயக்குனருடன் மோதிய தெறி நடிகரால் பரபரப்பு

தேசிய விருது பெற்ற, ‘நார்த் 24 காதம்’ படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். சப்தமயஸ்ரீ தஸ்காரஹா, லார்ட் விலிங்ஸ்டோன் 7000 கண்டி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். அதேபோல் தமிழில் தெறி மற்றும் ஏராளமான மலையாள படத்தில் நடித்திருப்பவர் பினீஷ் பாஸ்டின்.
கேரளாவில் அனில் மற்றும் பினீஷ் இருவருக்கும் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று இருவரும் கலந்துகொண்டனர்.

ஆனால் நிகழ்ச்சியில் பினீஷ் கலந்துகொள்வது அனில் ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதாம். விழாவுக்கு வந்தபிறகு பினீஷ் வந்திருக்கும் தகவல் இயக்குனருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதில் கோபம் அடைந்த இயக்குனர் ‘பினீஷ் மேடைக்கு வந்தால் நான் இங்கே இருக்க மாட்டேன்’ என்றார். இந்த தகவல் நடிகருக்கு தெரியவர அவர் சூடாகிப் போனார், தனது அறையிலிருந்து வெளியில் புறப்பட்டவர் நேராக மேடைக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமராமல் தரையில் உட்கார்ந்தார்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பின்பே பினீஷ் சமாதானம் அடைந்தார். பின்னர் இந்த சம்பவம்பற்றி பினீஷ் கூறும்போது,’நான் கட்டிட தொழிலிலிருந்து நடிக்க வந்தவன். அவரது(இயக்குனர்) சாதியை சேர்ந்தவன் கிடையாது. தேசிய விருதும் வாங்கவில்லை. இதனால்தான் அவர் பக்கத்தில் என்னை உட்காரவிடாமல் செய்வதற்காக இப்படி நடந்துகொண்டிருக்கிறார்.

அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேடையில் சேரில் அமராமல் தரையில் அமர்ந்தேன்’ என்றார். இதையடுத்து அனில் ராதாகிருஷ்ணனை தாக்கி இணைய தளத்தில் கருத்துக்கள் பரவின. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அனில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், பினீஷ் சொல்வது தவறு, நான்  ஜாதி பாகுபாடு பார்ப்பவன் கிடையாது’ எனவும் தெரிவித்தார்.

Tags : actor ,
× RELATED நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி