×

நடிகரின் உடற்கட்டை பார்த்து சமந்தா வியப்பு..

நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க திட்டமிட்டிருக்கும் நடிகை சமந்தாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் புதுப்பட வாய்ப்புகள் ஏற்காமல் தவிர்த்து வருகிறார். அதேசமயம் தன்னை பற்றிய செய்திகளை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனையாக நடிக்க வேண்டும் என்பது சமந்தாவின் ஆசை.

அதற்கான வாய்ப்பு வராவிட்டாலும் தனது உடற்கட்டை அதற்கேற்ப ஸ்லிம்மாக, ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவர், கட்டுமஸ்தான தோற்றத்துக்கு மாறியிருக்கும் புகைப் படத்தை வெளியிட அதைக்கண்டு அசந்துபோயிருக்கிறார் சமந்தா.

சமந்தாவுடன் ஓ பேபி படத்தில் நடித்தவர் நாக சவுரியா. இவர் குண்டான தோற்றத்தில் இருந்தார். கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தற்போது கட்டுமஸ்த்தான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். அந்தபுகைப்படத்தை நெட்டில் பகிர்ந்தார். அதைக்கண்டுதான் சமந்தா வியப்படைந்திருக்கிறார். வாவ் மை காட்... இது என்ன உடம்பா... எப்படி நடந்தது.. என்று  அவரை புகழ்ந்திருக்கிறார்.

Tags : Samantha ,actor ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி