×

ஜெய்க்காக மோதிக்கொள்ளும் நடிகைகள்

டைட்டிலை பார்த்ததும் இது எங்கே, எப்படி நடந்தது என்று யோசிக்கத் தோன்றும், இதெல்லாம் கேப்மாரி படத்தில் ஹீரோ ஜெய்க்காக அதுல்யா ரவி, வைபவி சந்தியா மோதிக்கொள்ளும் மோதல்கள்தான். இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறும்போது,’ஐடியில் பணியாற்றும் ஜெய்யை அதுல்யா, வைபவி இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களில் ஜெய்யை அடைவது யார் என்பதை இளமை துள்ளளுடன் இப்படம் சொல்லும்.

சினிமாவில் கருத்து சொல்லும் காலம் மலையேறி விட்டது. சுற்றிலும்  டென்ஷனான சூழலில் இருக்கும் இளைஞர்கள் அதிலிருந்து விலகி ஜாலியான படத்தை பார்க்க எண்ணுகிறார்கள். அதற்கேற்ற படமாக கேப்மாரி இருக்கும். அதற்கு நான் கேரன்ட்டி. இப்படத்தில் துளிகூட அரசியல் கிடையாது. கேப்மாரின்னு டைட்டில் வைத்தது ஏன் என்கிறார்கள். ஒன்றுக்கு 4 பெண்களோடு சுற்றுபவரை வேறு எப்படி சொல்லமுடியும், அதனால்தான் இந்த டைட்டில் வைக்கப்பட்டது. இது ெஜய்க்கு 25வது படம், எனக்கு 70வது படம். இதுதான் நான் இயக்கும் கடைசி படம். இதற்குமேல் படம் இயக்க மாட்டேன். ஆனால் சினிமாவில் இருப்பேன். படம் தயாரிப்பேன், இளம் இயக்குனர்களுக்கு படம் இயக்க வாய்ப்பு தருவேன்’ என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

Tags : Actresses ,Jay ,
× RELATED போதை பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஜாமீன் மனு தள்ளுபடி