×

ஒரு குழந்தையை தத்தெடுத்து கொடுங்கள்: நடிகருக்கு மெசேஜ் அனுப்பிய நடிகை

வசூல் ராஜா எம்பிபிஎஸ், சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, ஆயிரத்தில் இருவர், கலகலப்பு 2 என பல்வேறு படங்களில் குணசித்ரம், காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் காஜல் பசுபதி. இவர் நடிகர் லாரன்ஸுக்கு டிவிட்டரில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், ‘உங்கள் தொடர்பு எண் கிடைக்கவில்லை. மாஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். குழந்தை இல்லாமல் யாருடைய வாழ்க்கையும் முழுமையாகாது. அதனால் உங்கள் மூலமாகவே ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன், குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுங்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார். குழந்தையை தத்து எடுத்து தர கேட்கும் காஜலின் கோரிக்கைபற்றி லாரன்ஸ் இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags : baby ,actor ,actress ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…