×

சமையல்காரர் வேடத்தில் யோகி பாபு

தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், பட்லர் பாலு. மற்றும் இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோ சங்கர், தாடி பாலாஜி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, பால் லிவிங்ஸ்டன். இசை, கணேஷ் ராகவேந்திரா. வசனம், எஸ்.பி.ராஜ்குமார். இயக்கம், எம்.எல்.சுதிர்.

திருமண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். திருமணம் ஒன்றில் மணப்பெண்ணை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகின்றனர். இதனால் போலீஸ் அவரை கைது செய்கிறது. பிறகு போலீஸ் வலையில் இருந்து யோகி பாபு எப்படி தப்பித்தார் என்பது கதை.

Tags : Yogi Babu ,cook ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...