×

சிவாஜி பட டைட்டிலில் புதுபடம்

சிவாஜி, நடித்த பச்சை விளக்கு டைட்டிலில் புதுபடம் உருவாகிறது. இப்படத்தை எழுதி இயக்கி நடிக்கிறார் டாக்டர் மாறன். அவர் கூறிய தாவது: சாலை பாதுகாப்பு படிப்பில் பிஎச்டி முடித்திருக்கிறேன். சாலை விபத்து  தமிழகத்தில்தான் அதிகம். அதற்கு காரணம் சாலை விதி மீறல்கள் தான். அதை எப்படி தவிர்க்கலாம், அதேபோல் வாழ்க்கையில் எல்லை மீறினால் என்னவாகும் என்பதை உணர்த்தும் கதையாக பச்சை விளக்கு உருவாகியிருக்கிறது.

இதில் டிராபிக் வார்டன் வேடத்தை நான் (மாறன்) ஏற்க தீஷா, தாரா, ரூபிகா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன், சிவங்கர் நடித்திருக்கின்றனர். டாக்டர் மணிமேகலை தயாரிக்கிறார். தேவேந்திரன் இசை. எஸ்.வி.பாலாஜி ஒளிப்பதிவு. இப்படத்துக்கு சிவப்பு மஞ்சள் பச்சை, நில் கவனி செல் என டைட்டில்கள் யோசித்தேன். அந்த டைட்டில்கள் கிடைக்கவில்லை. இறுதியில் பச்சை விளக்கு டைட்டில் கிடைத்தது. சிவாஜி நடித்த பட டைட்டில் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. டிசம்பர் மாதம் இப்படம் ரிலீஸ்.

Tags :
× RELATED யூடியூப் டாப் 100 பாடல்களில் 28-வது...