×

ஹீரோயினுக்கு லிப் டு லிப் முத்தம் தருவது சண்டைபோலதான்.. துருவ் விக்ரம்

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் உருவான படம் அர்ஜூன்ரெட்டி. இதில் விஜய்தேவரகொண்டா, ஷாலினி பாண்டே லிப் டு லிப் முத்தக்காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. இப்படம் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் உருவாகியிருக்கிறது. கிரீசயா இயக்கி உள்ளார். துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். பனிதா சந்து ஹீரோயின். பரபரப்பான முத்தக்காட்சியில் முதல் படத்திலேயே நடித்ததுபற்றி துருவ் விக்ரம் கூறியதாவது:

இது காதலை அழுத்தமாக சொல்லும் கதை. இப்படத்தை எனக்கு முதல்பட மாக நடிக்க தேர்வு செய்துதந்தது எனது தந்தைதான். படப்பிடிப்பு நடக்கும் போது கேமரா அருகிலேயே இருப்பார். நன்றாக நடித்தால் ஓகே சொல்வார் இல்லாவிட்டால் குப்பை என்று அங்கேயே சொல்லிவிடுவார். விஜய்தேவர கொண்டா நடிப்பை நான் காப்பி அடிக்கவில்லை. அவர் காட்டிய உணர்வு களை உள்வாங்கிக்கொண்டு எனது பாணியில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹீரோயினுடன் லிப் டு லிப் காட்சியில் நடிக்கும்போது எப்படி இருந்தது என்கிறார்கள். அதுவும் ஒரு திரைப்பட காட்சி என்ற அளவில்தான் எனது மனம் பக்குவப்பட்டிருந்தது. சண்டை காட்சியில் நடிப்பதுபோலத்தான் இதுவும் ஒரு காட்சி. இது தொழில் ரீதியான பணி அவ்வளவுதான். எனது தந்தை விக்ரமின் நடிப்பைபார்த்து வளர்ந்தவன் நான். அவர் எவ்வளவு கடினமாக உழைப்பார் என்பதை வீட்டில் நேரில் பார்த்திருக்கிறேன். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் அவரைப்போல உழைக்க கண்டிப்பாக முயல்வேன்.

Tags : Dhruv Vikram ,
× RELATED இலங்கை காவல்நிலையத்தில் இருந்து பல...