விஷால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் லவ்லி சிங்

இந்தியில் சில படங்களில் நடித்துள்ள லவ்லி சிங், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாக்கப்படுகிறது. முதல் பாகத்தில் விஷால் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். அதில் அவர் கொல்லப்படுவார். இதனால், 2ம் பாகத்தில் அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது புது நடிகையாக இருந்தால் குறிப்பிட்ட கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு யோசித்தது. ஆடிஷனில் நிறைய பேர் கலந்து கொண்டார்கள். இதில், லவ்லி சிங் ஹீரோயினாக நடிக்க தேர்வானார். இந்தப் படத்தில் குணச்சித்திர வேடங்களில் ரகுமான், கவுதமி நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார்.

Tags : Lovely Singh ,debut ,Vishal ,
× RELATED ஐபிஎல்: டெல்லி அணியில் களம் இறங்குகிறார் ரகானே