×

பட தயாரிப்பிலிருந்து பின் வாங்கும் நடிகை...

பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். கோடிகளில் இவரது சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு படத்துக்கு ஒப்பந்தம் ஆனவுடன் அவரது காஸ்டியும் செலவு முதல் விமான டிக்கெட் வரை தயாரிப்பாளர் பாக்கெட்டிலிருந்துதான் தரப்படுகிறது.

ஹீரோயின்கள் சிலர் இயக்குனர்கள் ஆகியிருக்கும் நிலையில் காஜலுக்கு திடீரென்று தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. இயக்குனர் பிரசாத் வர்மா கூறிய ஆவ் 2 என்ற ஸ்கிரிப்ட் பிடித்ததால் தயாரிக்க முன்வந்தார். இதற்காக காஜல் அகர்வால் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கவும் முடிவு செய்தார்.

பட தயாரிப்பு பற்றியும் அதற்கான செலவு குறித்தும் சமீபத்தில் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார் காஜல். அப்போதுதான் தயாரிப்புக்கு செலவு செய்ய வேண்டிய பெரும் தொகைபற்றிய விவரம் தெரியவந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகு படம் தயாரிக்கும் எண்ணத்தை காஜல் அகர்வால் கைவிட்டுவிட்டாராம். இப்படத்தை வேறு யாராவது தயாரிக்க முன்வந்தால் அவரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருக்கிறார்.

Tags : Actress ,film making ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...