×

அஜீத் ரசிகர்கள் போட்டா போட்டி.. 61வது பட இயக்குனர் யார்?

கல்யாணமே ஆகல அதுக்குள்ள புள்ள பெத்துகணும்னா எப்படி என்று தமாஷாக கூறுவார்கள். அதுபோல் ஒரு மோதல் அஜீத் ரசிகர்களுக்கு இடையே நடந்துகொண்டிருக்கிறது. இதுபற்றிய ஹேஷ்டேக் திடீரென டிரெண்டாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத்குமார் நடிக்கும் 60வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.  இப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திர தேர்வு நடந்து முடியவில்லை, படப்பிடிப்பும் தொடங்க வில்லை.

அதற்குள் அஜீத் நடிக்கும் 61வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பதுபற்றி அஜீத் ரசிகர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று ஒரு தரப்பும் புஷ்கர் காயத்ரி இயக்குவார் என்று இன்னொரு தரப்பும் ஹேஷ் டேக் செய்து வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் நியாயமாகவே இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அஜீத் நடித்த தீனா படத்தை இயக்கினார். இப்படத்துக்கு பிறகுதான் அஜீத்தை தல என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். தற்போது முருகதாஸ், ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் அதேபோல் புஷ்கர் காயத்ரி ஏற்கனவே மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர்.

அஜீத் படத்தை இயக்கவுள்ளதாக இந்த இயக்குனர்களின் பெயர்கள் ஏற்கனவே அடிபட்டதால் தற்போது அதை பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். இதற்கிடையில் இன்னும் சிலர் கைதி படம் இயக்கியதுடன் தற்போது விஜய்64 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் ஆகியோர் அஜீத்தின் 61வது படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

Tags : Ajith Fans Competition ,film director ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சினிமா இயக்குனர் விபத்தில் பலி