×

வீட்டில் திருமண ஏற்பாடு - காஜல் அகர்வால் தகவல்

‘என் திருமணத்துக்கு இப்போது என்ன  அவசரம்?’ என்று கேட்டு, அடிக்கடி டென்ஷனாகி விடுகிறார் தமன்னா. திருமணத்தை  பற்றி கேட்டாலே அனுஷ்காவுக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்நிலையில், தன் திருமணம் குறித்து கூலாக பதில் சொல்லியிருக்கிறார், காஜல் அகர்வால். ‘கிட்டத்தட்ட என் திருமணத்தை பற்றி வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்கு கணவராக வருபவர் நல்ல நகைச்சுவை உணர்வு  கொண்டவராக, சிறந்த பக்தியாளராக இருக்க வேண்டும். தினமும் நான்  ஷூட்டிங்கிற்கு செல்லும்போது, கடவுளை வணங்குவது மட்டுமின்றி, கடவுளின்  சின்ன சிலையையும் கொண்டு செல்வேன். என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால்,  உடனே அவரை திருமணம் செய்துகொள்வேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

Tags : Kajal Agarwal ,
× RELATED ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்