×

7 வருடத்துக்கு பின் மீண்டும் மம்தா

தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாடகியும் கூட. தமிழிலும் சில படங்களில் பாடியுள்ளார். கடைசியாக 2012ல் தடையற தாக்க படத்தில் நடித்தவர், பின்னர் மலையாள சினிமாவுக்கு திரும்பிவிட்டார்.

அந்த சமயத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது 7 வருடம் கழித்து தமிழில் ஊமை விழிகள் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை புதியவர் விஎஸ் இயக்குகிறார்.

Tags : Mamta ,
× RELATED மேற்குவங்கத்தில்10, 12 பொதுத்தேர்வு...