×

காதலன் பிரிவால் வாடும் இலியானா

நடிகை இலியானா வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோன் உடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தனர். இதனால் இலியானாவுக்கு பட வாய்ப்புகள் பறிபோனது. இதையடுத்து ஆண்ட்ருவுடனான காதலை முறித்துக் கொண்டதுடன் அவரைவிட்டு பிரிந்தார். காதல் பிரேக் அப் ஆகி சில மாதங்கள் ஆகியும் பெரிதாக  பட வாய்ப்புகள் இலியானாவுக்கு வரவில்லை.

இந்நிலையில் இலியானா காதல் பிரிவில் வாடிக்கொண்டிருக்கிறார். தனிமையில் அவர் இருக்கும் நேரங்களில் காதலன் நினைவு அவரை வாட்டுகிறதாம். சமீபத்தில் வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்தவருக்கு எங்கேயோ ஒலித்த காதல் பாடல் ஒன்று காதில் விழ அதைக்கேட்டு மெய்மறந்து நின்றார்.

தனது நிலையை புகைப்படமாக நெட்டில் வெளியிட்ட இலியானா கூடவே ஒரு மெசேஜ் பகிர்ந்தார். ‘காதல்  பாடல்களைக் கேட்டு, ஒரு மியூசிக் வீடியோவில் என்னை கற்பனை செய்து கொண்டிருக்கும்போது நான் ஜன்னலுக்கு வெளியே விவேகமாகப் பார்க்கிறேன்’ என்று தனக்கு புரிந்த காதல் மொழியில் தனது நிலையை உணர்த்தியிருக்கிறார்.

Tags : Iliana ,
× RELATED திருமணமாகாமல் கர்ப்பமான இலியானாவின் கணவர் யார்?சஸ்பென்ஸ் நீடிப்பு