×

இந்திக்கு போகிறது ஆடை

அமலாபால் நடிப்பில் மேயாத மான் படத்துக்கு பிறகு ரத்னகுமார் இயக்கிய படம் ஆடை. இந்த படத்தில் நிர்வாண காட்சியில் அமலாபால் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் ரத்னகுமார் ஈடுபட்டிருந்தார். அவரது முயற்சி வெற்றி பெற்றுள்ளது. நடிகர் அருண் பாண்டியன் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.

ரத்னகுமார் இயக்குகிறார். இதில் நடிக்க கங்கனா ரனவத்திடம் பேசியதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா கேரக்டரில் தலைவி படத்தில் நடிக்க கங்கனா ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் இதில் நடிப்பாரா என்பது சந்தேகமே என படக்குழு தெரிவித்துள்ளது. ரத்னகுமாரிடம் கேட்டபோது, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என்றார்.

Tags :
× RELATED நிவர் புயலின் கோரத் தாண்டவத்தால்...