×

பாத்ரூமில் மட்டுமே படமாக்கப்பட்ட ரூம்

அம்முவாகிய நான், நேற்று இன்று ஆகிய படங்களை தொடர்ந்து பத்மா மகன் இயக்கியுள்ள படம், ரூம். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகியுள்ளது. படம் குறித்து அவர் கூறுகையில், ‘தெலுங்கு நடிகர் அபிஷேக் வர்மா, அவள் பெயர் தமிழரசி மனோசித்ரா நடித்துள்ளனர்.

தெலுங்கில் 300 படங்களுக்கு இசை அமைத்த வினோத் யஜமான்யா இசை அமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின்  விசேஷம், படத்தின் 75 சதவிகித காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. திரில்லர் கதை என்றாலும், ரசிகர்கள் இதுவரை  பார்க்காத  கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Room ,bathroom ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...