×

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தலம்; திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிப்பு

குமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்துடன் ெதாடர்புடைய 12 சிவன் கோயில்களில் 10 வது கோயில் திருவிதாங்கோடு மகாதேவர் கோயில். ஒன்றரை ஏக்கர் பரப்புள்ள வளாகத்தில் தெற்கு பாகம் சிவன் கோயிலும், வடக்கு பாகம் விஷ்ணு கோயிலும் உள்ளன. இரண்டு கோயில்களுக்கும் தனித்தனியே செப்பு ெகாடிமரங்கள் உண்டு. இரண்டு கோயில்களுக்கும் இடையே இடைவெளியும், முன்பகுதியில் பரந்த வெளியும், வெளிப்பிரகாரமும், சுற்றிலும் பெரிய மதில் சுவரும் உள்ளது.கோயில் முகப்பில் சிறு மண்டபம் உண்டு. சிவன் கோயிலின் முக மண்டபம் 10 தூண்களை கொண்ட பெரிய மண்டபம். இங்கு நந்தி உண்டு. இதனை நந்தி மண்டபம் என்கின்றனர். இந்த மண்டபத்தை அடுத்து தெற்கு வடக்காக ஒரு கல் மண்டபம் உள்ளது. இங்கு கலச பூஜை நடைபெறும். அடுத்து கருவறை, இதற்கு சோபனப்படி உண்டு. கருவறையை சுற்றி உட்பிகாரம் உண்டு. கருவறை விமானம் வேசரவகை, இதன் அதிஷ்டான அமைப்பு கோயிலின் பழமையை காட்டுகிறது.விஷ்ணு கோயில், சிவன் கோயிலின் வட பகுதியில் உள்ளது. கோயிலின் முன்புறம் கொடிமரமும், பலி பீடமும் உள்ளன. இக்கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தை அடுத்து தெற்கு வடக்காக சிறிய அரங்கு உள்ளது. இந்த மண்டபத்தை அடுத்து நான்கு கால்கள் உடைய சிறு மண்டபமும், கருவறையும் உள்ளன. விஷ்ணு கோயில் கருவறையை சுற்றி தரைமட்டத்தில் இருந்து திருச்சுற்று மண்டபம் உண்டு. இக்கோயில் விமானம் வேசர வகையினது ஆகும். கூம்பு வடிவம் . சிவன் கோயிலும், விஷ்ணு கோயிலும் தனித்தனி கோயில்கள் என்றாலும் இரண்டையும் இணைக்கும் முன்பக்க சுவர் உண்டு. இது இரண்டையும் ஒரே கோயில் என்னும் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.திருவிடைக்கோடு கோயிலில் 27 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை தமிழ் மொழியிலும் வட்டெழுத்திலும் அமைந்துள்ளன. கல்வெட்டுகள் தவிர இக்கோயில் தொடர்பாக 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மலையாள ஓலை ஆவணம் ஒன்றும் கிடைத்துள்ளது. கல்வெட்டுகள் காலத்தால் முற்பட்டதும், கி.பி 9ம் நூற்றாண்டினது ஆகும். இதனால் இக்கோயில் கி.பி 9ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று தெரிகிறது.இக்கோயில் கல்வெட்டு ஒன்று மூலவரை ‘ஈசான சிவன்’ என்றும், ‘ஆலமரப்பொந்தில் இருப்பவர்’ என்றும் கூறுகிறது. நம்பூதிரிகள் மூலவரை ‘பரிதிபாணி’ என்றும் குறிப்பிடுகின்றனர். திருவிதாங்கோடு சிவன் கோயிலை பிற 11 சிவாலயங்களில் இருந்தும் பிரித்து காட்டுகின்ற அம்சம் இங்குள்ள சிற்பங்கள். குறிப்பாக வெளிபிரகாரத்தில் உள்ள விளக்கு பாவைகள். சிவன் கோயில் முகப்பு மண்டப தூண்களில் துவார பாலகர்கள், அர்ஜுனன், கர்ணன், ஆளுயர சிற்பங்கள் உள்ளன. இவற்றின் மீது முழுவதுமாக சூரியஒளி படுவது இதன் சிறப்பு ஆகும். இங்குள்ள மன்மதன் சிற்பம் கரும்பு வில்லுடன் உள்ளது. விஷ்ணு கோயிலின் வட பகுதியில் இருந்து வெளிப்பிரகாரம் சுற்றிலும் வெளியே பல்வேறு வடிவங்களை உடைய பாவை விளக்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றை ‘தீப லட்சுமிகள்’ என கூறுவது இங்கு வழக்கம். பெண்ணின் பல்வேறு வயதுகளை காட்டும் வேறுபட்ட சிற்பங்கள், யாளிகள் இங்கு உள்ளன. இவை எல்லாம் 16 அல்லது 17ம் நூற்றாண்டினது ஆகும். இக்கோயில்களில் மார்கழி திருவிழாவும், சிவராத்திரி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இரு கோயில்களிலும் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் திருவிழாவிற்கு கொடியேறும் அன்று இங்கும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயிலில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30க்கு அபிஷேகம், காலை 6க்கு பூஜை, காலை 10க்கு தீபாராதனை, காலை 10.30க்கு நடையடைப்பு, மாலை 5க்கு நடை திறப்பு, மாலை 6.30க்கு பூஜை, இரவு 7.30க்கு நடை அடைக்கப்படுகிறது. நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் தக்கலை, கேரளபுரம் வழியாக தென்மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது திருவிதாங்கோடு மாதேவர் ஆலயம்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவிதாங்கோடு மகா தேவர் கோயிலில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி திருப்பணிகள் ெதாடங்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்று முதல் தொடர்ந்து இடைவெளியின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. தினசரி 20 முதல் 30 பணியாளர்கள் வரை திருப்பணிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், ‘திருக்ேகாயிலில் கல்சுவர்கள் பாவு கல்லில் படிந்துள்ள சுண்ணாம்பு காரையினை தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல் மற்றும் பாயின்ட்டிங் பணிகள் ரூ.7.57 லட்சம் மதிப்பில் நடக்கிறது. இதனை போன்று திருக்கோயிலில் வெளிச்சுற்று பிரகாரம் தளத்தை விரிவுபடுத்தும் பணி ரூ.ரூ.26.27 லட்சம் மதிப்பில் நடக்கிறது. தற்போது 8 அடி இருக்கும் வகையில் தளம் அமைக்கப்படுகிறது. யானைகள் ஊர்வலம் நடைபெறும் வகையில் இந்த தளம் ஏற்படுத்தப்படுகிறது.திருக்கோயிலில் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.12.11 லட்சத்தில் நடக்கிறது. திருக்கோயிலில் பழுதுபட்ட மின் இணைப்புகளை மாற்றி புதிய மின் இணைப்புகள் பொருத்தும் பணிகள் ரூ.16.55 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. திருக்கோயிலில் திருமதில்சுவர் பழுதடைந்துள்ளதை மாற்றி திரும்ப கட்டும் பணியும் ரூ.22.14 லட்சம் மதிப்பில் நடக்கிறது. இவை தவிர மதில் சுவர் சீரமைக்கும் பணிகள் மேலும் ரூ.20 லட்சத்திற்கும் மேல் என்று மொத்தம் ரூ.1.20 ேகாடி மதிப்பில் இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பொதுநல நிதியில் இருந்தே இந்த பணிகள் நடைபெறுகிறது.ெதால்லியல் துறை ஆய்வாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து என்னென்ன பணிகளை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்றும் கருத்துகளை தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மண்டல குழுவில் 9 பேர் கொண்ட தொல்லியல் குழுவினர் வந்து பணிகளை அங்கீகாரம் வழங்குவர். உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர் குழு இதற்கு ஒப்புதல் வழங்கும். அதன் பிறகுதான் எஸ்டிமேட் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. கோயில் எப்படி இருக்கிறதோ, அப்படியே திருப்பணிகள் நடக்கிறது. குறிப்பாக கருங்கல்லில் உள்ள வெள்ளை காரை அகற்றப்படுகிறது. ஜனவரி மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மே மாதம் கும்பாபிஷேக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தந்திரியிடம் இதற்காக தேதி கேட்ட பின்னர் கும்பாபிஷேக தேதி இறுதி செய்யப்படும்’ என்றார்.கடுக்காய், கருப்பட்டி நீரால் சாந்து தயாரிப்புசுண்ணாம்பு, மாவு அரிப்பில் அரித்து எடுக்கப்பட்ட மணல், கடுக்காய் நீர், கருப்பட்டி சேர்த்து ஒருவாரம் புளிக்க வைக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவாரம் கழித்து எடுத்து நன்றாக அரைத்து எடுத்து பேஸ்ட் வடிவில் கொண்டுவரப்பட்டு அதனை கொண்டு சுவர்களில் பாயின்டிங் பணிகள் நடக்கிறது. இது மெதுவாக செட் ஆகும் சிறப்பு கொண்டது. இதன் உறுதிதன்மை காலம் சிமென்டை விட அதிகம். ேகாயிலில் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த நிலையில் அது முழுவதும் அகற்றப்படுகிறது.பாறை மீது செதுக்கப்பட்ட கருவறை லிங்கம்கருவறை மூலவர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். கருவறை வாசலைவிட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும்படி உள்ளது. தாய்ப்பாறையில் இந்த லிங்கம் செதுக்கப்பட்டது என்கின்றனர். மேலும் இது பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதனை உறுதி செய்யும் வகையில் கருவறை அருகே பெரிய பாறை ஒன்று புடைப்பாக அப்படியே விடப்பட்டு அதில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு ேகாயில் கருவறை உயரமாக காட்சி தருகிறது. விஷ்ணு சங்கு சக்கரம் ஏந்தி பிற இரு கைகளில் கதை ஆயுதமும், தாமரை மலரும் ஏந்தி நிற்கிறார். இங்கு பரிவார தெய்வங்களாக சாஸ்தா, நாகர், கணபதியும் உள்ளனர்….

The post ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தலம்; திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahadev Temple ,Travancore ,Thiruvananthapuram Mahadeva Temple ,Shivalay Ota ,Kumari district.… ,
× RELATED சபரிமலையில் நேற்று வரை 6.60 லட்சம் பக்தர்கள் தரிசனம்