×

லண்டனில் துப்பறிவாளன் 2

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம் துப்பறிவாளன். இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளனர். சுந்தர்.சி இயக்கும் ஆக்‌ஷன் படத்தை முடித்துவிட்ட விஷால், துப்பறிவாளன் 2வில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொடர்ச்சியாக 45 நாட்கள் லண்டனில் ஷூட்டிங் நடத்த உள்ளனர்.

அங்கு லொகேஷன்களை தேர்வு செய்யும் பணியில் மிஷ்கின் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை விஷாலே தயாரிக்கிறார். முதல் பாகத்தை போல இதிலும் விஷாலின் உதவியாளராக பிரசன்னா நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

Tags : Detective ,London ,
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...