×

ஒரு வருடத்துக்கு பிறகு குழந்தையின் முகத்தை காட்டிய காவ்யா

நடிகர் திலீப், மஞ்சுவாரியர் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார் கருத்து வேறுபாடு காரணமாக திலீப், மஞ்சுவாரியர் முறைப்படி விவாகரத்து செய்தனர். அதுபோல் நடிகை காவ்யா மாதவன், நிஷால் சந்திரா என்பவரை மணந்தார். இவர்களும் ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் திலீப், காவ்யா மாதவன் இருவரும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு சென்ற வருடம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் முகத்தை கடந்த ஒரு வருடமாக வெளியே காட்டாமல் இருந்தனர். ஒரு வருடம் முடிந்த நிலையில் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடினர்.

இதையடுத்து முதன்முறையாக குடும்பத்துடன் குழந்தையின் புகைப்படத்தை திலீப் நெட்டில் பகிர்ந்தார். மலையாள நட்சத்திரங்களாக இருந்தாலும் நடிகர் திலீப் தமிழில் விஜயகாந்த் நடித்த  ராஜ்ஜியம் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் காசி, என் மன வானில் படங்களில் நடிகை காவ்யா மாதவனும், முதன்முறையாக தமிழில் அசுரன் படம் மூலம் மஞ்சு வாரியரும் நடித்துள்ளனர்.

Tags : Kavya ,baby ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்