×

தஞ்சை பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் சார்லி. 59 வயதான நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை 'சார்லி' என மாற்றிக் கொண்டார். விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி பிறந்த நடிகர் சார்லி, தமிழ் இலக்கியத்கில் எம். ஏ. பட்டதாரி ஆவார்.

'இயக்குநர் சிகரம்' கே. பாலச்சந்தர் இயக்கிய 'பொய்க்கால் குதிரை' திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டு நகைச்சுவை நடிகராக அறிமுகமான சார்லி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இதுவரை 800க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் விவேக்குடன் இணைந்து 'வெள்ளைப்பூக்கள்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சார்லி ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் செய்த ஆய்வுக்காக அவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது. இதனிடையே இதற்காக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Charlie ,Tanjore University ,
× RELATED வேட்பாளரை எச்சரித்த டொவினோ தாமஸ்