அருவி படத்தில் நடித்தவர் அதிதி பாலன். அந்த படத்துக்கு பிறகு பல படங்களில் வாய்ப்பு வந்தாலும் எதையும் ஏற்க மறுத்தார். கதைகள் சரியில்லாததால் அந்த படங்களை நிராகரித்ததாக அவர் கூறினார். இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றார். அதே சமயம் இப்போது மற்றொரு மலையாள படத்திலும் நடிக்க சம்மதித்துள்ளார்.
குஞ்சாக்கோ போபன் இதில் நடிக்கிறார். இதில் அவருடன் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து நித்யா மேனன் நீக்கப்பட்டுள்ளார். படக்குழுவுடன் நித்யாவுக்கு ஏற்பட்ட மோதலே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நித்யா மேனன் வேடத்தில் நடிக்க அதிதி பாலனை தேர்வு செய்துள்ளனர். ஷாகித் காதர் இந்த படத்தை இயக்குகிறார்.