×

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் வாதிட்டார்.  லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார். எஸ்.பி.வேலுமணி தரப்பில், புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், தமிழக அரசு 2020ம் ஆண்டு எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டது என்றார். எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்….

The post டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : SB ,Velumani ,ICourt ,Chennai ,Madras High Court ,minister ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு