×

இ.பி.கோ 306ல் நீட் தேர்வில் நடக்கும் மறைமுக வியாபாரம்

இ.பி.கோ  306 படத்தை டாக்டர் சாய் எழுதி இயக்கி வில்லனாக நடிக்கிறார். மேலும் சீனு  மோகன், தாரா பழனிவேல், சீனிவாசன், கணேஷ், ரிஷி, கமலேஷ் நடிக்கின்றனர். படம்  குறித்து சாய் கூறுகையில், ‘நான் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர். சினிமா  ஆர்வம் காரணமாக, யாரிடமும் உதவியாளராக இல்லாமல், குறும்படம் இயக்கிய அனுபவத்தை வைத்து இப்படத்தை இயக்கி நடித்துள்ளேன்.

என் தோழி உயர் படிப்பு  படித்தபோது, அவரை தற்கொலைக்கு தூண்டிய சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில்  கதை எழுதியுள்ளேன். நீட் தேர்வில் நடக்கும் மறைமுக வியாபாரம் குறித்தும்,  கல்வி முறையில் செய்ய வேண்டிய புதிய மாற்றங்கள் குறித்தும் படத்தில் சொல்கிறோம்’ என்றார்.

Tags :
× RELATED ஊரடங்கால் முடங்கிய மூங்கில் பொருட்கள் வியாபாரம்