×

2 ஹீரோக்களுடன் ரித்திகா சிங்

இறுதிசுற்று படத்தில் கிக் பாக்ஸராக நடித்த ரித்திகா சிங், ஆண்டவன் கட்டளையில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தார். அடுத்து விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தில் மீண்டும் இணைகிறார் ரித்திகா சிங். இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது,’அசோக் செல்வன் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இப்படத்தில் வாணி போஜன், சாரா என நட்சத்திர பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆச்சர்யப்படுத்தும் கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரம் இது. இந்த வேடத்தில் நடிக்க எளிமையை நிஜத்தை பிரதிபலிக்க வேண்டும். பலரை யோசித்து பார்த்து இறுதியாக அசோக் செல்வன் மூலம் விஜய்சேதுபதியிடம் கதையை, கேரக்டரை விவரித்தேன்.

உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். சிறிது நேரமே இந்த கதாபாத்திரம் வந்தாலும் நெஞ்சில் பதிந்துவிடும். நகர்புற மேல்தர வர்கத்து காதலை இயல்பாக சொல்லும் காதல் கலந்த காமெடியாக இப்படம் உருவாகிறது. ஜி.டில்லிபாபு, அபிநயா செல்வம் தயாரிப்பு லியான் ஜேம்ஸ் இசை. விது அயன்னா ஒளிப்பதிவு’ என்றார் அகமது.

Tags : Ritika Singh ,heroes ,
× RELATED கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது