×

400-வது படத்தில் சவுகார் ஜானகி

ஹேராம் படத்தில் நடித்த சவுகார் ஜானகி, 14 வருட இடைவெளிக்கு பிறகு வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்தார். இப்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில்  நடிக்கிறார். இது அவரது 400வது படம். இதுகுறித்து ஆர்.கண்ணன் கூறுகையில், ‘அதர்வா நடிக்கும் படத்தை இயக்கும் நான், அதே நேரத்தில் சந்தானம் நடிக்கும் முழுநீள காமெடி படத்தையும் இயக்குகிறேன்.

இதில் சவுகார் ஜானகி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவருடன் ஆனந்தராஜ், நான்  கடவுள் ராஜேந்திரன், மனோகர் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் சவுகார் ஜானகியின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டோம். படப்பிடிப்பு நடந்து  வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Saugar Janaki ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...