×

மேட்டுப்பாளையம் அருகே கணவனை இழந்தவரை மணந்த புதுமாப்பிள்ளை குத்திக் கொலை: அண்ணன் கைது

மேட்டுப்பாளையம்:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை, வடமங்களக்கரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இதே பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் பெருமாள்ராஜ் விபத்தில் சிக்கி பலியானார். அதை தொடர்ந்து அவரும் பாலசுப்பிரமணியும் காதலித்துள்ளனர். இது தெரிந்து பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலை கைவிடமுடியாது என்று கூறி எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  ஹேமசுதாவை, சுப்பிரமணி திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனி குடித்தனம் தொடங்கினர். இந்நிலையில், பாலசுப்பிரமணி  தாயை பார்க்க நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்றார்.  அங்கு அவரது அண்ணன் பாலமுருகன் (35) இருந்தார். அவர் எங்கள் எதிர்ப்பையும் மீறி விதவையை திருமணம் செய்த நீ இங்கு ஏன் வந்தாய்? என்று தம்பியிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில், பாலமுருகன்,   பாலசுப்பிரமணியின் தலையில் கத்தியால் குத்தினார்.   மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலசுப்பிரமணி நேற்று உயிரிழந்தார்.  பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். …

The post மேட்டுப்பாளையம் அருகே கணவனை இழந்தவரை மணந்த புதுமாப்பிள்ளை குத்திக் கொலை: அண்ணன் கைது appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Balasubramani ,Karamadai, Vadamangalakarai ,Coimbatore district ,Hemasuda ,Pudumapilla ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது