×

தனியாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை

முன்பெல்லாம் விஐபிக்கள், செலப்ரட்டிகள் மட்டுமே பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடி வந்தனர். சமீபகாலமாக பிறந்தநாள் என்றாலே தடபுடலுடன் நண்பர்கள் சூழ கேக் வெட்டி கொண்டாடுவது பேஷனாகி வருகிறது. இந்த பாணியிலிருந்து விலகி நிற்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். சமீபத்தில் அவருக்கு பிறந்த நாள் வந்தது. அதை யாருக்கும் சொல்லாமல் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த பகுதியில் கடற்கரை இல்லத்தில் டயனிங் டேபிளில் சாக்லெட் கேக் வெட்டி கொண்டாடினார்.

அந்த படத்தை நெட்டில் பகிர்ந்திருக்கிறார். இதுபற்றி பூஜா தரப்பில் கூறும்போது,’உள் ஒன்று வைத்து வெளியில் மகிழ்ச்சியுடன் பாராட்டுவதுபோன்று சிலர் நடிப்பது பூஜாவுக்கு பிடிக்காது. அதனால்தான் அவர் தனியாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். ஆரவாரம் இல்லாமல் அமைதியான இந்த நிகழ்ச்சி மனதுக்கு இதமான அனுபவத்தை தந்தது’ என்றனர்.

Tags : actress ,birthday ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!