விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், சியான் விக்ரம் நடக்கும் படித்தில் நடிக்கவுள்ளார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் துருக்கி போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 2020ல் வெளியாகவுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்திய அணிக்காக கிரிக்கெட் களத்தில் அசத்திய இர்பான் பதான், தற்போது கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: