×

பிரபாஸ்-அனுஷ்கா காதல் மீண்டும் சூடுபிடிக்கிறது; பிறந்த நாளில் திருமணம் பற்றிய அறிவிப்பு?

கடந்த சில வருடங்களாகவே பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாகவும், திருமணம் செய்யவிருப்பதாகவும் கிசுகிசு பரவி வருகிறது. பாகுபலி படத்தில் இருவரும் இணைந்து நடித்தபிறகு கிசுகிசு தீவிரமானது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் வரும் 23ம் தேதி பிரபாஸுக்கு பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் தனது திருமண அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று திரையுலகில் தகவல் பரவி வருகிறது.

அதற்கு பலம்சேர்ப்பதுபோல் முன்னதாக வரும் 19ம் தேதி பிரபாஸ், அனுஷ்கா இருவரும் லண்டனில் நடக்கவுள்ள இசை அமைப்பாளர் கீரவாணியின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஒரே மேடையில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் தோன்றவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அன்றைய தினம் திருமண அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Prabhas-Anushka ,
× RELATED லண்டனில் சுற்றும் லவ்பேர்ட்ஸ்...