×

இந்தியில் இன்னிங்ஸ் தொடங்கிய கீர்த்தி

கோலிவுட்டிலிருந்து அசின், காஜல் அகர்வால், தமன்னா, ரகுல் ப்ரீத், ஸ்ருதி ஹாசன், டாப்ஸி, இலியானா என நடிகைகள் பலர் பாலிவுட்டில் கால்பதிக்க நினைத்து முயற்சித்து பார்க்கின்றனர். தற்போதைக்கு இவர்களில் டாப்ஸி மட்டுமே ஓரளவுக்கு தாக்கு பிடித்து வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு தாவியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ேதாற்றத்துக்கு மாறியிருக்கிறார். போனிகபூர் தயாரிக்க அமீத் ரவீந்திரநாத் சர்மா இயக்கும் மைதான் என்ற இந்தி படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக நடிக்கிறார் கீர்த்தி. இதில் கால்பந்தாட்ட கோச்சாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கீர்த்தி பங்கேற்று நடித்தார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை கீர்த்தி தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு தமிழில் புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் மலையாளம், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடிக்கிறார் கீர்த்தி.

Tags : Keerthi ,innings ,
× RELATED கீர்த்தி சுரேசை பின்தொடரும் 50 லட்சம் பேர்