×

சமந்தா படத்திலிருந்து தமன்னா விலகல்

தமிழ் தெலுங்கு மொழிப்படங்களில் இரண்டு அல்லது 3 ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிப்பது அடிக்கடி நடக்கிறது. பாகுபலியில் அனுஷ்கா, தமன்னா நடித்தனர். இந்தியன் 2ம் பாகத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். இந்நிலையில் டோலிவுட்டில் ராஜு காரி காதி 3 ஹாரர் படத்தில் தமன்னா நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதில் சமந்தாவும் நடிக்கிறார். ஓம்கார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் திடீரென்று தமன்னா அப்படத்திலிருந்து விலகி விட்டார். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,’தமன்னா இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.

எதிர்பாராதவிதமாக கால்ஷீட் தேதி அட்ஜெஸ்ட் செய்துகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் படத்திலிருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அவிகா கர் நடிக்க உள்ளார்’ என்றனர். தமன்னா நடித்த காமெடி கலந்த பேய் படமான பெட்ரோமாக்ஸ் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து விஷாலுடன் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் 2 தெலுங்கு, 1 இந்தி படம் என 3 படங்களில் நடித்து வருகிறார்.

Tags : Tamanna ,Samantha ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா