×

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது ஏன்? - சிருஷ்டி டாங்கே

டார்லிங், மேகா, கத்துக்குட்டி, காலக்கூத்து, முப்பரிமாணம், தர்மதுரை ஆகிய படங்களில்  நடித்தவர், சிருஷ்டி டாங்கே. தற்போது அவர் எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் கட்டில் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். யமுனா படத்துக்கு பிறகு கணேஷ் பாபு இயக்கி ஹீரோவாக நடிக்கும்  இப்படத்தில் நடிப்பது குறித்து சிருஷ்டி டாங்கே கூறியதாவது:

கட்டில் என்ற தலைப்பை வைத்து, இது அந்த மாதிரி கதையாக இருக்குமோ என்று முடிவு செய்ய வேண்டாம். இது உணர்வுப்பூர்வமான குடும்பக்கதை கொண்ட படம். குடும்பத்துக்கும், பாரம்பரிய கட்டிலுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் உள்ள உறவுமுறைகள் மற்றும் அவர்களுக்கு இடையே ஏற்படும் உணர்வுரீதியான போராட்டங்கள்தான் கதை.

நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களாகி  விட்டது. இதுவரை இதுபோல் ஒரு கேரக்டரில் நடித்ததில்லை. கணேஷ் பாபுவின்  மனைவியாக, முதல்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறேன். அதற்குள் அம்மாவாக நடிப்பது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு இந்த  படம் ரிலீசாகும்போது பதில் கிடைக்கும்.

Tags : mom ,Creator Dange ,
× RELATED இடவலத்துக் கக்காட்டு ஜானகி அம்மாள் : சிறந்த தாவரவியல் விஞ்ஞானி