×

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்திற்கு பிறகு, ரியோ ராஜ் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 17ம் தேதி தொடங்குகிறது. ராஜேஷ்குமார், எல்.சிந்தன் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். கதை, ஏ.சி.கருணாமூர்த்தி. வசனம், ஆர்.கே. இந்த படத்தை செம்ம போத ஆகாதே, பாணா காத்தாடி ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்.

இப்படத்தில் பாலா சரவணன், ரோபோ ஷங்கர், முனிஷ்காந்த், ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். பத்ரி வெங்கடேஷின் முதல் இரு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாதான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.

Tags : Ramya Nambeesan ,Rio ,Badri Venkatesh ,
× RELATED பிரேசிலில் மீண்டும் கொட்டி வரும்...