×

ஸ்ரீகாந்துடன் இணையும் நடன இயக்குனர்

நடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் படம் சம்பவம். மைனா, சாட்டை, மொசக்குட்டி. சவுகார்பேட்டை படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார். சம்பவம் படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, ’நேர்மையாக வாழ்பவன் ஒருவன் நேர்மைக்கு புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து சில உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகாந்த், தினேஷ் இணையும் இப்படத்தில் பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஹீரோயின்கள். பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசை. முத்து கே.குமரன் ஒளிப்பதிவு’ என்றார்.

Tags : Choreographer ,Srikanth ,
× RELATED பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து...