×

சன்னிலியோனுடன் நெருங்கி பழகும் தமிழ் நடிகர்

சன்னிலியோன் என்றாலே ரசிகர்களுக்கும், சில நடிகர்களுக்கும் ஒரு மயக்கம் தான். ஆபாச வீடியோக்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அதேபோல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். இந்தியில் ஹீரோயின் வேடங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் சன்னிலியோன், கோலிவுட் நடிகர் நவ்தீப் எடுத்துக்கொண்ட செல்பி புகைப் படம் வெளியானது. இது கிசுகிசுக்களை கிளப்பி உள்ளது. அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ, இது என்ன மயக்கம் போன்ற படங்களில் நடித்த நவ்தீப் தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.  அவர் நடிக்கும் படமொன்றில் சன்னி லியோன் நடனம் ஆடுகிறார்.

அப்போது இருவரும் செல்பி எடுத்துக்கொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் ஏக்தா கபூர் இயக்கும் ராகினி எம்எம்எஸ் 3ம் பாகம் படத்தில் சன்னிலியோன் நடிக்கிறார். அதில் நவ்தீப்பும் நடிக்கிறார். அப்போது இருவருக்கும் நட்பு உருவாகி அதில் செல்பி எடுத்துக்கொண்டார்களாம். தற்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

நவ்தீப்புடன் எடுத்த செல்பியை சன்னி தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு, ‘நவ்தீப்புடன் பணியாற்றியது ரொம்பவும் அருமை. அவர் இனிமையானவர்’ என குறிப்பிட்டிருக்கிறார். சன்னி வெளியிட்ட மெசேஜை அப்படியே பகிர்ந்திருக்கும் நவ்தீப், ‘உங்களுடன் பணியாற்றியது எனது பாக்யம். நீங்கள் ரொம்பும் கலகலப்பானவர். அங்கு ஏதாவது நடந்தால் அதுபற்றி நாங்கள் அறிய விரும்புகிறோம்’ என கூறி உள்ளார்.

Tags : Tamil ,actor ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...