×

ஹன்சிகாவுக்கு வில்லனான கிரிக்கெட் வீரர்

நயன்தாரா, டாப்சி ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், தமன்னாவும் அவ்வப்போது இதுபோன்ற கதைகளை தேர்வு செய்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். இவர்கள்  ஏற்கனவே  ‘அம்புலி’ ,  ‘அ ‘,  ‘ஜம்புலிங்கம்’ படங்களை இயக்கியுள்ளனர். ஹன்சிகாவுக்கு வில்லனாக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ஏற்கனவே இவர் இந்தியில் அக்ஸர் 2, மலையாளத்தில் டீம் 5 படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஹன்சிகா படம் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ பட தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். ஹாரர், காமெடி, பேய்ப்படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Tags : Hansika ,
× RELATED கார்டியன் விமர்சனம்…