×

பிற மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு தமிழகத்தில் தொழில் செய்யும் வழக்கறிஞர்கள் எத்தனை பேர்? பட்டியல் தர பார்கவுன்சில் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராக பலர் பதிவு செய்துவிட்டு பதிவை 6 மாதங்களுக்குள் மாற்றாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜராகி வாதிட்டு வருகிறார்கள். இதேபோல் பிற மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் தொழில்புரியும் வழக்கறிஞர்களின் பட்டியலை அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் தலைவரும், செயலாளரும் பார்கவுன்சிலிடம் வழங்க வேண்டும். அதேபோல வேறு தொழில் அல்லது முழு நேர பணியில் ஈடுபட்டிருப்பவர் வழக்கறிஞர் பதிவை தாங்களாகவே பதிவு இடைநீக்கம் செய்திருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளது. அவ்வாறு இடைநீக்கம் செய்யாதவர்களின் பட்டியலையும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்….

The post பிற மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு தமிழகத்தில் தொழில் செய்யும் வழக்கறிஞர்கள் எத்தனை பேர்? பட்டியல் தர பார்கவுன்சில் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Puducherry Bar Council ,President ,PS Amalraj ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...