தயாரிப்பை கைவிட்ட சசிகுமார்

நாடோடிகள் 2, ராஜவம்சம், பரமகுரு, நாநா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், சசிகுமார். அவர் கூறுகையில், ‘நாடோடிகள் படத்துக்கும், 2ம் பாகத்துக்கும் தலைப்பு தவிர எந்த தொடர்பும் கிடையாது. அந்த கதை வேறு, இந்த கதை வேறு. முதலில் வேறொரு பெயர் சூட்ட முடிவு செய்தோம்.

ஆனால், நாடோடிகள் படம் மிகப் பெரிய ஹிட்டானதால், அது கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், நாடோடிகள் 2 என்று பெயர் சூட்டினோம். மீண்டும் நான் எப்போது படம் இயக்குவேன் என்று கேட்கிறார்கள். தற்போது நடிப்பில் பிசியாக இருப்பதால், அடுத்த ஆண்டில்தான் மீண்டும் படம் இயக்க முடியும். அதுபோல், தொடர்ந்து நான் படம் தயாரிப்பது குறித்து எந்த முடிவும் செய்யவில்லை’ என்றார்.

Related Stories:

More