×

மாத்தூர் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: மாத்தூரில் ரூ.1.20 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாதவரம் அருகே மாத்தூர், எம்.எம்.டி.ஏ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லாமல் மின் விநியோகம் செய்யும் வகையில் அங்குள்ள துணை மின் நிலையத்தில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி ரூ.1.20 கோடி செலவில் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தில் 16 எம்ஏ திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று இதனை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாதவரம் எம்எல்ஏ  சுதர்சனம்  தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர், செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன், உத“வி செயற்பொறியாளர் அருணாச்சலம், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், பகுதி செயலாளர் புழல்நாராயணன், கவுன்சிலர் காசிநாதன், தாமரைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்….

The post மாத்தூர் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்: முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mathur ,Chief Minister ,Tiruvottiyur ,M. K. Stalin ,Madhavaram ,MMDA ,Dinakaran ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...