×

கூட்டு பலாத்கார கதையில் டபுள் ஹீரோயின்

கூட்டுபலாத்கார கதையாக உருவாகிறது குற்றம் புரிந்தால். டிஸ்னி எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது,’கிரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இதில் பெண் குழந்தைகள், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்து கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. தனது முறைப் பெண்ணை அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்ய அவர்களை ஹீரோ எப்படி பழி தீர்க்கிறார் என்பதை இதுவரை இல்லாத வகையில் புதிய டெக்னிக்குடன் படம் விளக்குகிறது.

ஆதிக் பாபு ஹீரோவாக அறிமுகமாகிறார். அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கிறார். கே.எஸ்.மனோஜ் இசை. கே.கோகுல் ஒளிப்பதிவு. மேலும் எம்எஸ்.பாஸ்கர், ராம்ஸ், அருள் டி.சங்கர் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது’ என்றார்.

Tags :
× RELATED இலங்கை காவல்நிலையத்தில் இருந்து பல...