×

பெண்களின் வலிமையை சொல்லும் ஆட்டி படம்

சென்னை: லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்துள்ள படம், ‘ஆட்டி’. இதை ‘மேதகு: பாகம் 1’, ‘சல்லியர்கள்’ ஆகிய படங்களை இயக்கிய தி.கிட்டு இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக, காவல்துறை அதிகாரி வேடத்தில் இசக்கி கார்வண்ணன் நடித்துள்ளார். மற்றும் ‘அயலி’ அபி நட்சத்திரா, ‘காதல்’ சுகுமார், சவுந்தர், பிரவீன் பழனிசாமி நடித்துள்ளனர்.

‘எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்’ என்ற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். சி.மு.இளங்கோவன் எடிட்டிங் செய்ய, முஜிபுர் ரகுமான் அரங்கம் அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சீமான், எழுத்தாளர் சுகா, எம்.கஸாலி, திருமுருகன் கலந்துகொண்டனர்.

படம் குறித்து தி.கிட்டு கூறுகையில், ‘ஊர் தலைவி அல்லது குடும்பத்தலைவியை ‘ஆட்டி’ என்று சொல்வார்கள். தமிழர்களுக்கு அதிகமான பெண் குலதெய்வங்கள் இருக்கின்றன. அவர்களை மையப்படுத்தி உருவாக்கியுள்ளோம்’ என்றார். இசக்கி கார்வண்ணன் கூறும்போது, ‘உலகிலேயே முதல் பெண்கள் ராணுவம் அமைத்தது தமிழர்கள். ஒரு ஊர் நன்றாக இருப்பதற்கு பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்களின் வலிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட நாங்கள் உருவாக்கியுள்ள படம் இது’ என்றார்.

Tags : Chennai ,Isakki Karvannan ,Lakshmi Creations ,T. Kittu ,Ayali' Abhi Natchathira ,Kaathal' Sukumar ,Soundar ,Praveen Palaniswami ,Sibi Sadasivam ,Theesan ,C.M. Ilangovan ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...